< Back
சினிமா செய்திகள்
Ajith started a car racing team
சினிமா செய்திகள்

கார் பந்தய அணியை தொடங்கிய அஜித்

தினத்தந்தி
|
28 Sept 2024 10:27 AM IST

'அஜித் கார் ரேஷிங்' என்ற கார் பந்தய அணியை நடிகர் அஜித் தொடங்கியுள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானவர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, குட்பேட் அக்லி படமும் அடுத்தாண்டு வெளியாக உள்ளது. நடிகர் அஜித் குமார் பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் உள்ளவர் என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம் தான்.

சூட்டிங் இல்லாத நேரத்தில் தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு ஜாலியாக நண்பர்களுடன் மோட்டார் பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்தநிலையில், அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் படியனான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னெவென்றால் 'அஜித் கார் ரேஷிங்' என்ற கார் பந்தய அணியை நடிகர் அஜித் தொடங்கியுள்ளார்.

இது குறித்த அறிவிப்பை நடிகர் அஜித்தின் மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பேபியன் டபியூ என்பவர் இந்த அணியின் அதிகாரபூர்வ ரேஸிங் ஓட்டுநராக செயல்படுவார் எனவும், ஐரோப்பியாவில் நடைபெறும் 24 எச் கார் பந்தயத்தில் போர்ஷே 992 ஜிடி3 கப் பிரிவில் 'அஜித் குமார் ரேஸிங்' அணி பங்கேற்கும் எனவும் அவர் கூறியுள்ளார்

மேலும் செய்திகள்