< Back
சினிமா செய்திகள்
நடிகர் அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் இந்தி ரீமேக் - சல்மான்கான் நடிக்கவுள்ளதாக தகவல்
சினிமா செய்திகள்

நடிகர் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் இந்தி ரீமேக் - சல்மான்கான் நடிக்கவுள்ளதாக தகவல்

தினத்தந்தி
|
7 Nov 2023 4:23 PM IST

நடிகர் அஜித்குமார் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர்.

சென்னை,

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த 2015 -ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி, திரிஷா ஆகியோர் நடித்திருந்தனர். இதில் அருண் விஜய், அனிகா, பார்வதி நாயர், விவேக், உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் அருண் விஜய்யின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இதனை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தமிழில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஹிந்தியில் இந்த படம் ரீமேக் ஆகவுள்ளது. இந்த படத்தில் சில மாற்றங்களை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்