அஜித், ஷாலினி திருமண நாள்; #ஷாலினிஅஜித்குமார் ஹேஷ் டேக்கை டிரெண்டாக்கிய ரசிகர்கள்
|நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினியின் 23-வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து உள்ளனர்.
சென்னை,
நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி இருவரும் படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்தபோதே திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமணம் கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி நடைபெற்றது.
இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்தவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில், நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் திருமணம் செய்து இன்றுடன் 23 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு இருவரும் தங்களது குடும்பத்தினருடன் அதனை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டனர்.
எனினும், அதனை சிறப்பிக்க அவரது ரசிகர்கள் முன்பே முடிவு செய்து அதற்கான கொண்டாட்டங்களில் ஈடுபட தொடங்கினர். அவர்களது திருமண நாளில் இருவரையும் வாழ்த்தி சமூக ஊடகங்களில் பல்வேறு புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் அஜித் மற்றும் ஷாலினியின் 23-வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்ததுடன், #ஷாலினிஅஜித்குமார் என்ற ஹேஷ் டேக்கையும் டிரெண்டாக்கி வருகின்றனர்.