< Back
சினிமா செய்திகள்
படப்பிடிப்பில் அஜித்
சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் அஜித்

தினத்தந்தி
|
13 Oct 2023 7:27 AM IST

அஜித் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தனது 62-வது படமான `விடாமுயற்சி' படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் `துணிவு' படம் திரைக்கு வந்த நிலையில், அஜித்குமார் சில மாதங்கள் பைக் பயணம் மேற்கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தனது 62-வது படமான `விடாமுயற்சி' படப்பிடிப்பில் இணைந்துள்ளார். ஏற்கனவே முடிவு செய்த விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் திருப்தி இல்லாமல் அவரை மாற்றி விட்டு மகிழ்திருமேனியை ஒப்பந்தம் செய்ததாலும், திரைக்கதையை உருவாக்க மகிழ் திருமேனி கொஞ்சம் நேரம் எடுத்ததாலும் இந்த காலதாமதம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

`விடாமுயற்சி' படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கி உள்ளது. நாயகியாக நடிக்க திரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். முதலில் காதல் காட்சிகளை படமாக்குகிறார்கள். அதன்பிறகு அதிரடி சண்டை காட்சிகளை எடுக்க உள்ளனர்.

இது முழு ஆக்ஷன் படமாக தயாராக இருப்பதாக தகவல், இதில் சஞ்சய்தத், ஆரவ் ஆகியோர் வில்லன்களாக நடிக்க பேசி உள்ளனர். ஏற்கனவே மகிழ்திருமேனி எடுத்த `கலகத்தலைவன்' படத்தில் ஆரவ் ஏற்ற வில்லன் கதாபாத்திரத்துக்கு வரவேற்பு கிடைத்தது.

அஜர்பைஜானில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு, அபிதாபியில் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்