ஐரோப்பிய நாடுகளில் அஜித்குமார் 2 மாதம் 'பைக்' பயணம்
|இங்கிலாந்தில் பைக்கில் பயணம் செய்து வருகிறார். 1,200 சிசி திறன் கொண்ட இந்த பைக்கில் 6 கியர்கள் உள்ளன. பைக் பயண புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்குமார் சினிமாவோடு பைக் பயணங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார். வலிமை படப்பிடிப்பு நடந்தபோது வட மாநிலங்களில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பைக் பயணம் செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து ரஷியாவிலும் 5 ஆயிரம் கிலோமீட்டர் பைக்கில் சுற்றி வந்தார்.
இந்த நிலையில் வினோத் இயக்கத்தில் நடிக்கும் 61-வது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் சமீபத்தில் முடித்த நிலையில் மீண்டும் பைக் பயணம் செய்ய கிளம்பினார். இங்கிலாந்தில் பைக்கில் பயணம் செய்து வருகிறார். 1,200 சிசி திறன் கொண்ட இந்த பைக்கில் 6 கியர்கள் உள்ளன. பைக் பயண புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்கு பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பும் அஜித்குமார் புனேயில் நடக்க உள்ள 66-வது படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.
படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு மீண்டும் பைக் பயணம் மேற்கொள்ள உள்ளார். ஆகஸ்டு முதல் செப்டம்பர் மாதம் வரை ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் பைக்கில் சுற்றிவர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐரோப்பிய பைக் பயணத்தை முடித்த பிறகே விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.