கப்பலில் பயணித்த அஜித்குமார்
|அஜித்குமார் அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பல் ஒன்றில் பயணிக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அந்த படங்களை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
நடிகர் அஜித்குமார் கடந்த சில நாட்களாக ஐரோப்பிய நாடுகளில் பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே இங்கிலாந்து சென்று லண்டன் நகர வீதிகளை பைக்கில் சுற்றி வந்தார். பின்னர் பெல்ஜியம் நாட்டுக்கு சென்றார். அங்குள்ள அட்டோமியம் என்ற சுற்றுலா தளம் முன்பு நின்று அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் வலைத்தளத்தில் வைரலானது.
இந்த நிலையில் அஜித்குமார் தற்போது அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பல் ஒன்றில் பயணிக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அந்த படங்களை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். அஜித்குமார் விரைவில் இந்தியா திரும்பி தனது 61-வது படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பை வட மாநிலங்களில் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதில் மஞ்சுவாரியர் நாயகியாக நடிக்கிறார். படத்தை தீபாவளி பண்டிகையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.