< Back
சினிமா செய்திகள்
Ajith Kumar flying in a race car - The video shared by the Sarpatta actor has gone viral
சினிமா செய்திகள்

ரேஸ் காரில் பறக்கும் அஜித்குமார் - 'சார்பட்டா' நடிகர் பகிர்ந்த வீடியோ வைரல்

தினத்தந்தி
|
26 Jun 2024 1:39 PM IST

அஜித் அஜர்பைஜான் செல்வதற்கு முன்பு துபாயில், ரேஸிங் செய்துள்ளார்.

துபாய்,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது. விரைவில் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக அஜித் அஜர்பைஜான் செல்வதற்கு முன்பு துபாயில், ரேஸிங் செய்துள்ளார். அவ்வாறு ரேஸ் காரில் பறக்கும் வீடியோவை 'சார்பட்டா' படத்தில் நடித்த ஜான் கோக்கன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்