< Back
சினிமா செய்திகள்
திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி புகைப்படம்
சினிமா செய்திகள்

திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி புகைப்படம்

தினத்தந்தி
|
24 April 2024 8:45 PM IST

நடிகர் அஜித்குமார் இன்று தனது 24-ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகிறார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் இன்று தனது 24-ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகிறார். நடிகர் அஜித்குமார் கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் 24-ல் நடிகை ஷாலினியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

தற்போது இவர்கள் தங்களது 24-ம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டத்திற்காக நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு ரசிகர்களுடன் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் செய்திகள்