நடிகர் அஜித் ஜென்டில்மேன் இல்லை என்னை ஏமாற்றிவிட்டார் ...! தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு
|நடிகர் அஜித் மீது தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தன்னிடம் வாங்கிய கடனை இன்னும் திருப்பி தரவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார்.
சென்னை
கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு , இந்திரலோகத்தில் நா அழகப்பன், பார்த்திபன் இயக்கத்தில் வித்தகன் படங்களை தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்
அஜித் தனது பெற்றோரை மலேசியாவிற்கு விடுமுறைக்கு அனுப்ப விரும்பி பல வருடங்களுக்கு முன்பு என்னிடம் கடன் வாங்கினார். அப்போது அவர் எனக்கு ஒரு படம் செய்வதாகவும், அவருடைய சம்பளத்தில் இந்த தொகையை சரிசெய்து கொள்லலாம் என்றும் என்னிடம் கூறினார். இன்றுவரை, அவர் பணத்தைத் திருப்பித் தரவில்லை, எனக்குப் படம் செய்து கொடுக்கவில்லை. இத்தனை வருடங்களில் அவர் இதைப் பற்றிப் பேசவே இல்லை. அவர் தன்னை ஜென்டில்மேன் என்று சொல்லிக் கொள்கிறார், ஆனால் அவர் அப்படி இல்லை.
அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியை எனக்கு முன்பே தெரியும் என்றும் அவர் தனது நல்ல தோழி.
அவருக்கு நல்ல குடும்பம் இருக்கிறது, ஒவ்வொரு படத்திற்கும் 50 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் சம்பாதிக்கிறார்.அவர் ஏமாற்ற வேண்டிய அவசியம் என்ன?" ஏ.எம்.ரத்னம் போன்ற தயாரிப்பாளர்களும் அஜித் படங்களைத் தயாரிப்பதால் நஷ்டத்தை சந்தித்ததாகவும், இதுவரை அவர்களுக்கு உதவவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு அஜித் இதுவரை பதிலளிக்கவில்லை. இதற்கு முன்பு கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் மீதும் இதே குற்றச்சாட்டு எழுந்தது.