< Back
சினிமா செய்திகள்
பைக் சாகச நண்பர்களை அறிமுகப்படுத்திய அஜித்....புகைப்படங்கள் வைரல்

image courtecy:twitter@SureshChandraa

சினிமா செய்திகள்

பைக் சாகச நண்பர்களை அறிமுகப்படுத்திய அஜித்....புகைப்படங்கள் வைரல்

தினத்தந்தி
|
20 March 2024 4:56 PM IST

அஜித் தனது பைக் பயணத்தை தொடங்கியுள்ளார்.

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அஜர்பைஜான் நாட்டில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து, 2-வது கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தயாராகி வருகிறது. சமீபத்தில் சென்னைக்கு திரும்பிய அஜித், தனது மகனின் பிறந்த நாளை கொண்டாடினார்.

குடும்பத்துடன் நேரத்தை செலவிட்ட அவர், சில தினங்களுக்கு முன்னர் அப்போலோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். மூளையில் இருந்து காது பகுதிக்கு வரும் நரம்பில் வீக்கம் இருந்ததால், அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டதாக சொல்லப்பட்டது. பின்னர், அஜித்துக்கு மூளையில் அறுவை சிகிச்சை என வெளியான தகவல்கள் பொய் என்பது உறுதியானது.

இந்நிலையில், விடாமுயற்சி படத்துக்கான 2-வது கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்காததால் அஜித் தனது பைக் பயணத்தை தொடங்கியுள்ளார். அதன்படி தற்போது மத்தியபிரதேசத்தில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு சென்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அதன்படி தற்போது தனது பைக் சாகச நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க உள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கட்ந்த வாரம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்