< Back
சினிமா செய்திகள்
இரட்டை வேடத்தில் அஜித்...! விடாமுயற்சி படத்தின் முக்கிய தகவல் கசிந்தது...!
சினிமா செய்திகள்

இரட்டை வேடத்தில் அஜித்...! 'விடாமுயற்சி' படத்தின் முக்கிய தகவல் கசிந்தது...!

தினத்தந்தி
|
13 Oct 2023 11:12 AM IST

விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

'துணிவு' படத்தை தொடர்ந்து அஜித்குமார் தற்போது 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் அஜித்குமார், நாயகியாக நடிக்கும் திரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பை துபாய் மற்றும் சென்னையில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். குறிப்பாக துபாய் பாலைவனத்தில் பிரமாண்டமான சண்டைக் காட்சியை படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சென்னையில் ஓரிரு வாரங்கள் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது.

தற்போது இந்த படம் குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி விடாமுயற்சி படத்தில் அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. திரிஷாவை தொடர்ந்து இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தாவும் நடிக்க பேசியுள்ளனர்

அஜித்குமாரின் முந்தைய படங்கள் போல இந்த படமும் அதிரடி சண்டை கதைகளத்தில் தயாராக உள்ளதாகவும், இதில் இளமை தோற்றத்தில் அஜித்குமார் நடிக்க உள்ளதாகவும் படக்குழுவினர் தரப்பில் கூறுகின்றனர். இந்த புதிய தகவல்கள் அஜித்குமார் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் செய்திகள்