மீண்டும் பைக் பயணத்தில் நடிகர் அஜித்...!
|நடிகர் அஜித் மத்தியபிரதேசத்தில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார்.
நடிகர் அஜித் ஒரு பைக் பிரியர் என்பதும் அவர் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் பயணம் செய்து உள்ளார் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அவர் மத்தியபிரதேசத்தில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார்
'துணிவு' படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் அவர் நடித்து வருகிறார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அஜர்பைஜான் நாட்டில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து, 2-வது கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தயாராகி வருகிறது. சமீபத்தில் சென்னைக்கு திரும்பிய அவர், தனது மகனின் பிறந்த நாளை கொண்டாடினார்.
குடும்பத்துடன் நேரத்தை செலவிட்ட அவர், சில தினங்களுக்கு முன்னர் அப்போலோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். மூளையில் இருந்து காது பகுதிக்கு வரும் நரம்பில் வீக்கம் இருந்ததால், அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டதாக சொல்லப்பட்டது.
அஜித்துக்கு மூளையில் அறுவை சிகிச்சை என வெளியான தகவல்கள் பொய் என்பது உறுதியானது. அதேபோல், சிகிச்சை காரணமாக அவர் சில நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ அப்போலோவில் இருந்து வீடு திரும்பிய மறு நாளே மகன் ஆத்விக்கின் பள்ளிக்கு விசிட் செய்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.
விடாமுயற்சி 2-வது கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்காததால் தனது பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். பைக் பயணத்தில் பிரேக்கில் கேஷுவலாக கால் மீது கால் போட்டு ரெஸ்ட் எடுத்து வருகிறார் அஜித். அப்போது எடுக்கப்பட்ட போட்டோவை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். 'Fit And Agile !!! AK back on Track' என்ற தலைப்புடன் அஜித் மீண்டும் பைக் ட்ரிப்பில் களமிறங்கிவிட்டார் என அப்டேட் கொடுக்க, ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விடாமுயற்சியை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.