ஆர்ஆர்ஆர் நாட்டு நாட்டு பாடலுக்கு என்னால் தான் ஆஸ்கார் விருது கிடைத்தது - சொல்கிறார் அஜய் தேவ்கான்
|போலாவை விளம்பரபடுத்த தி கபில் சர்மா ஷோவில் அஜய் தேவ்கானும், தபுவும் கலந்து கொண்டனர்.
மும்பை
தமிழல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் இந்தியில் அஜய் தேவ்கான் மற்றும் தபு நடிப்பில் போலா என்ற படமாக எடுக்கபட்டு உள்ளது. இந்தப் படம் மார்ச் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளீயாக உள்ளது.
போலாவை விளம்பரபடுத்த தி கபில் சர்மா ஷோவில் அஜய் தேவ்கானும், தபுவும் கலந்து கொண்டனர்.
நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததற்கு நிகழ்ச்சியில் அஜய்கானுக்கு கபில் வாழ்த்து தெரிவித்தார். (ஆர்ஆர்ஆர் படத்தில் அஜய் தேவ்கானும் நடித்து உள்ளார்) அப்போது அஜய் தேவ்கான் ஒரு வேடிக்கையான பதில் அளித்தார். "என்னால் தான் ஆர்ஆர்ஆர் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றது" என கூறினார்..
எப்படி என்று கபில் கேட்டதற்கு, பாடலில் நான் நடனமாடியிருந்தால் கிடைத்திருக்குமா என அஜய் பதிலளித்தார். அஜய் தேவ்கானுக்கு நடனம் வராது அவர் பாடலில் நடனமாடியிருந்தால், அது ஒருபோதும் வென்றிருக்காது என்று அவர் நகைச்சுவையாக சுட்டிக்காட்டினார்.