ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது - சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ரஜினி
|ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
சென்னை,
2012 ம் ஆண்டு வெளியான '3' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா. அந்த படத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து 2015 ம் ஆண்டு கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'வை ராஜா வை' படத்தை இயக்கினார்.
இதன் பின் டாகுமெண்டரி மற்றும் ஆல்பம் என்று இயக்கி வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரைப்படம் இயக்குகிறார்.
லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகர் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு 'லால் சலாம்' என பெயரிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மேலும், இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 'லால் சலாம்' திரைப்படம் 2023ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.