< Back
சினிமா செய்திகள்
ரிலீசுக்கு தயாராகும் ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி..!
சினிமா செய்திகள்

ரிலீசுக்கு தயாராகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'சொப்பன சுந்தரி'..!

தினத்தந்தி
|
13 Feb 2023 10:36 PM IST

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'சொப்பன சுந்தரி' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு தெரிவித்துள்ளது.

சென்னை,

ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அருண் ராஜா காமராஜ் இயக்கிய 'கனா' படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். சமீபத்தில் அவர் நடிப்பில் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்', 'ரன் பேபி ரன்' உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின.

தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பர்ஹானா, டிரைவர் ஜமுனா ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. தொடர்ந்து இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் 'சொப்பன சுந்தரி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் லட்சுமி பிரியா, சரமவுலி, தீபா சங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அஜ்மல் தாஷீன் இசையமைத்துள்ளார். விஷால் சந்திரசேகர் பின்னணி இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 'சொப்பன சுந்தரி' திரைப்படம் வருகிற மார்ச் மாதம் வெளியாவதற்கு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்