ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு..!
|கடந்த மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை,
டார்லிங், இரும்புத்திரை, அண்ணாத்தே, ஹீரோ, மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிய ரா.சவரி முத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பக்ஸ், சேஷு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை கலகலப்பான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தை துவாரகா புரொடக்சன்ஸ் (Dwarka Productions) நிறுவனம் சார்பில் பிளேஸ் கண்ணன் - ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிக்கின்றனர். இந்த படத்துக்கு தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்கிறார். டி. இமான் இசையமைக்கிறார்.
கடந்த மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை மோஷன் போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்துக்கு 'சிஸ்டர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டரை, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குனர்கள் அருண்ராஜா காமராஜ், சாம் ஆண்டன், ஆதிக் ரவிச்சந்திரன், எடிட்டர் ஆண்டனி ரூபன் ஆகியோர் தங்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.