< Back
சினிமா செய்திகள்
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஃபர்ஹானா படத்தின் டீசர் வெளியானது..!
சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'ஃபர்ஹானா' படத்தின் டீசர் வெளியானது..!

தினத்தந்தி
|
23 April 2023 10:41 AM IST

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'ஃபர்ஹானா' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

சென்னை,

'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஃபர்ஹானா'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும், இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். 'ஃபர்ஹானா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் 'ஃபர்ஹானா' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

மேலும் செய்திகள்