ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'டிரைவர் ஜமுனா' படத்தின் 2-வது பாடல் வெளியீடு
|'டிரைவர் ஜமுனா' படத்தில் இருந்து 'சக்தி கூத்து' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வரிசையில் 'ஃபர்ஹானா' மற்றும் 'டிரைவர் ஜமுனா' ஆகிய திரைப்படங்களில் முன்னனி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
இதில் 'டிரைவர் ஜமுனா' திரைப்படத்தை 'வத்திக்குச்சி' படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். தயாரிப்பாளர் எஸ்.பி.சவுத்ரி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். படம் வரும் நவம்பர் மாதம் 11-ந்தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 'சக்தி கூத்து' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.