சிவகார்த்திகேயன்போல படக்குழுவுக்கு 'பிரியாணி' விருந்தளித்த பிரபல நடிகை - வீடியோ வைரல்
|ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'வளையம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் டியர். இப்படம் கடந்த மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
தற்போது, கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக 'உத்தரகாண்டா' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துவருகிறார். இப்படத்தை ரோஹித் படக்கி இயக்குகிறார். இந்த படம் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.
இவர் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள படம் 'வளையம்'. இந்த படத்தை இயக்குனர் மனோ பாரதி இயக்கி இருக்கிறார். ஜி.டில்லி பாபு இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.
இந்நிலையில், 'வளையம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அதில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்தார். அவர் படக்குழுவினருக்கு தன் கையாலேயே பிரியாணியை பரிமாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதற்கு முன்னதாக 'அமரன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவுக்கு பிரியாணி விருந்து அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.