< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஜெய் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்
|31 March 2023 9:09 AM IST
`அதே கண்கள்', `பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை டைரக்டு செய்த ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய படம் `தீராக் காதல்'. இதில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடிக்கிறார்கள். இன்னொரு நாயகியாக ஷிவதா நடிக்கிறார். அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குனர் ரோகின் வெங்கடேசன் மற்றும் ஜி.ஆர். சுரேந்தர்நாத் இணைந்து எழுதியுள்ளனர். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்ய, சித்துகுமார் இசையமைத்துள்ளார். காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது. இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தின் இறுதிகட்டப் பணிகள் முடிந்து, விரைவில் திரைக்கு வரத்தயாராக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.