< Back
சினிமா செய்திகள்
இந்தி படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்
சினிமா செய்திகள்

இந்தி படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

தினத்தந்தி
|
23 Oct 2022 7:04 AM IST

இந்தி படமொன்றில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறார். கனா படம் அவருடைய மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்தது. இதில் கிரிக்கெட் வீராங்கனையாக வந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து முடித்துள்ள பர்ஹானா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. சொப்பன சுந்தரியில் நகைச்சுவை நாயகி கதாபாத்திரம் ஏற்றுள்ளார்

தற்போது அதே கண்கள் படம் மூலம் பிரபலமான ரோகின் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது விறுவிறுப்பான திரில்லர் கதை என்கின்றனர்.

இந்த நிலையில் அடுத்து இந்தி படமொன்றில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இது தவிர தெலுங்கு படமொன்றிலும் நடிக்க உள்ளார். மேலும் 3 புதிய படங்களும் கைவசம் உள்ளன.

சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வலைத்தளத்தில் பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன.

மேலும் செய்திகள்