< Back
சினிமா செய்திகள்
ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் யோகிபாபு நடிக்கும் புதிய படம்
சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் யோகிபாபு நடிக்கும் புதிய படம்

தினத்தந்தி
|
2 Nov 2023 8:32 PM IST

ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் யோகிபாபு நடிக்கும் புதிய படத்தை துவாரகா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

சென்னை,

ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காக்கா முட்டை, ரம்மி, கனா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் வடசென்னை வெற்றிக்குப் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்துவருகிறார்.சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன.

இந்த நிலையில், யோகிபாபுடன் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார். சவரி முத்து இயக்கும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தை துவாரகா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் படபிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்