< Back
சினிமா செய்திகள்
கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
சினிமா செய்திகள்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்

தினத்தந்தி
|
16 May 2024 2:32 PM IST

நடிகை ஐஸ்வர்யா ராய் கையில் கட்டு போட்ட நிலையில், தனது மகளுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு நேற்று இரவு கிளம்பி சென்றுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்ட நிலையில், பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை பல பிரபலங்களும் வருடா வருடம் படையெடுத்து சென்று வருகின்றனர்.

இந்த விழாவில் பிரபலமாக இருக்கும் சிவப்பு கம்பளம் நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்று அலங்கரிக்க உள்ளார். வருடாவருடம் தவறாமல் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் அவருடைய பிரத்யேக உடையைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில், நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, தனது மகள் ஆராத்யாவுடன் மும்பை விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு கிளம்பி சென்றார் ஐஸ்வர்யா ராய்.

அப்போது, கையில் அடிபட்டு கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராயைப் பார்த்த ரசிகர்கள் பதறிப் போயுள்ளனர். 'ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு? அவர் சீக்கிரமே குணமாக வேண்டும்' என்று இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக கேன்ஸ் விழாவில் கலந்து கொள்ளும் ஐஸ்வர்யா, இந்த வருடமும் மிஸ் ஆகக் கூடாது என்பதற்காக கையில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் கிளம்பியிருக்கிறார்.

மேலும் செய்திகள்