அம்பானி இல்ல திருமண விழா: ஐஸ்வர்யா ராயுடன் அமெரிக்க மாடல் அழகி எடுத்த செல்பி வைரல்
|ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சியில் அமெரிக்க மாடல் அழகி கிம் கர்தாஜியன் கலந்து கொண்டார். அவர் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுடன் செல்பி எடுத்து புகைப்படம் வைரலாகி வருகிறது.
மும்பை,
உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான முகேஷ் அம்பானி- நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி (வயது 29). இவருக்கும் தொழிலதிபர் வீரேன் - ஷைலா மெர்ச்சென்ட் தம்பதியின் மகள் ராதிகா மெர்ச்சென்ட்டிற்கும் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் திருமணம் கடந்த 12-ந் தேதி மும்பையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் உள்ளூர் திரை பிரபலம் முதல் உலக பிரபலம் வரை பலரும் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர் டோனி, மல்யுத்த வீரர் ஜான் சீனா, ஹாலிவுட் நடிகர் நடிகைகள், அரசியல் கட்சியினர் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க மாடல் அழகி கிம் கர்தாஷியன் மற்றும் அவரது சகோதரி க்ளோ கர்தாஷியனுடன் கலந்து கொண்டார். புதுமணத் தம்பதிகள் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் உடன் கிம் கர்தாஷியன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
மேலும், அவர் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுடன் செல்பி எடுத்து புகைப்படத்தையும், நீடா அம்பானியுடன் எடுத்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அவை வைரலாகி வருகின்றன.
இந்த நிகழ்ச்சியில் அவர்களைத் தவிர, நிக் ஜோனாஸ், பிரியங்கா சோப்ரா, முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்கள் டோனி பிளேயர் மற்றும் போரிஸ் ஜான்சன் போன்ற நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.