< Back
சினிமா செய்திகள்
கண்களை உருட்டி,  உதட்டை குவித்து  ரசிகர்களை மயக்கும் டூப் ஐஸ்வர்யா ராய்
சினிமா செய்திகள்

கண்களை உருட்டி, உதட்டை குவித்து ரசிகர்களை மயக்கும் 'டூப்' ஐஸ்வர்யா ராய்

தினத்தந்தி
|
3 Sept 2022 11:53 AM IST

ஆஷிதா தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் வீடியோவில் குச் குச் ஹோதா ஹை திரைப்படத்தில் இருந்து கஜோலின் வரிகளில் ஒன்றை பாடி உள்ளார்.

மும்பை

ஐஸ்வர்யா ராய் போன்ற தோற்றத்தில் இருக்கும் ஆஷிதா சிங் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர்.அவரது கண்கள் முதல் மூக்கு மற்றும் உதடுகள் வரை அனைத்தும் ஐஸ்வர்யா ராய் போலவே உள்ளது.அவருக்கு லட்சக்கணக்கான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.இன்ஸ்டாகிராமில், ஆஷிதாவுக்கு 2,50,000 பின்தொடர்பவர்கள் உள்ளனர். அவர் ரீல் வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டு வருகிறார்.அவரது இன்ஸ்டாகிராமில் 90கள் மற்றும் 2000களின் ஹிந்தி பாடல்கள், உரையாடல்கள் மற்றும் பலவற்றின் ரீல் வீடியோக்கள் நிறைந்துள்ளன.

ஆஷிதா தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் வீடியோவில் குச் குச் ஹோதா ஹை திரைப்படத்தில் இருந்து கஜோலின் வரிகளில் ஒன்றை பாடி உள்ளார்.

ஆஷிதாவைப் ஐஸ்வர்யா ராய் பச்சனைப் போலவே எளிமையாகவும் அழகாகவும் இருக்க விரும்புகிறாள்.

'உலக அழகி' பட்டம் வென்ற பின்னர், ஐஸ்வர்யா ராய் 'இருவர்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். 'ஜீன்ஸ்', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' போன்ற படங்களிலும் நடித்தார். பின்னர் இந்தி சினிமாவில் நடிக்கத் தொடங்கி, அங்கு உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார். இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறினார்.

பின்னர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை விட 5 வயது பெரியவர். ஐஸ்வர்யா ராய் நடிப்பில் தமிழில் 'பொன்னியின் செல்வன்' படம் விரைவில் வெளியாக இருக்கிறது



மேலும் செய்திகள்