< Back
சினிமா செய்திகள்
கையில் எலும்பு முறிவு - அறுவை சிகிச்சை செய்ய ஐஸ்வர்யாராய் முடிவு?
சினிமா செய்திகள்

கையில் எலும்பு முறிவு - அறுவை சிகிச்சை செய்ய ஐஸ்வர்யாராய் முடிவு?

தினத்தந்தி
|
20 May 2024 7:13 AM IST

எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டுப்போட்டுள்ள கையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஐஸ்வர்யாராய் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

மும்பை,

பிரான்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழா இந்த ஆண்டு கடந்த 14-ம் தேதி துவங்கி வரும் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், பிரத்யேக உடைகள் அணிந்து ஒய்யாரமாக சிவப்புக் கம்பளத்தில் நடந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார். அவருடன் அவரது மகள் ஆராத்யா பச்சனும் இருந்தார். இந்த முறை ஐஸ்வர்யா ராய் கையில் மாவுக்கட்டு போட்டிருந்தார்.

அந்த புகைப்படம் வலைதளத்தில் வைரலானதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆனது என்று கேள்விகள் எழுப்பினர். விரைவில் குணமாக வேண்டியும் பதிவுகள் வெளியிட்டனர்.

ஐஸ்வர்யா ராய்க்கு விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. கட்டுப்போட்ட கையுடனேயே வித்தியாசமான உடையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றார்.

தற்போது ஐஸ்வர்யா ராய் பிரான்சில் இருந்து மும்பை திரும்பி உள்ளார். அடுத்த சில தினங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டுப்போட்டுள்ள கையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஐஸ்வர்யாராய் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்