பொது இடத்தில் கணவர் அபிஷேக்பச்சன் மீது கோபப்பட்ட ஐஸ்வர்யா ராய்?
|பாலிவுட் திரையுலகின் அழகான நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், கடந்த காலத்தில் நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மைய தொடக்கவிழாவில் மகள் ஆராத்யா பச்சனுடன் வந்து இருந்தார்.
ஜெய்பூர்
ஐஸ்வர்யா ராய்யின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புரோ கபடி லீக் போட்டி ஒன்றில் தனது கணவர் அபிஷேக் பச்சனின் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி விளையாடும் போட்டியைக் காண வந்திருந்தார். அவருடன் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யா மற்றும் அபிஷேக்கின் சகோதரியின் மகள் நவ்யா நந்தா உடனிருந்தனர்.
இதன் ஒரு பகுதியாக அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயிடம் ஏதோ கூற அதற்கு ஐஸ்வர்யா கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக கண்களை உருட்டி பார்க்கிறார். மேலும் அவர் உறவினர் மீதும் கோபப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
பாலிவுட் திரையுலகின் அழகான நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், கடந்த காலத்தில் நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மைய தொடக்கவிழாவில் மகள் ஆராத்யா பச்சனுடன் வந்து இருந்தார்.
அவரது கணவர் அபிஷேக் பச்சன் காணப்படவில்லை, இதனால் சமூக வலைதளங்களில் இருவருக்கும் இடையே பிளவு ஏற்ப்பட்டு உள்ளது. அவர்கள் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற ஊகங்கள் தொடங்கியது. இருப்பினும், பின்னர் அவர்களின் விவாகரத்து செய்தி ஒரு வதந்தியாக மாறியது,
தற்போது ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரின் வீடியோ சமூக வைரலாகி வருகிறது.