வில்லியாக ஐஸ்வர்யா ராய்
|ஐஸ்வர்யா ராய்க்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருப்பதால் அனைத்து மொழிகளிலும் அவருக்கு பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனாலும் பிடிக்காத கதைகளில் அவர் நடிப்பது இல்லை. வில்லி வேடங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளையும் நிராகரித்தார்.
ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் சோழ பேரரசை வீழ்த்த எதிரிகளுடன் சேர்ந்து சதித்திட்டங்கள் வகுக்கும் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த நிலையில் தெலுங்கு படமொன்றிலும் வில்லியாக நடிக்க ஐஸ்வர்யாராய்க்கு வாய்ப்பு வந்துள்ளது.
ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு திரையுலகில் பெரிய வரவேற்பு உள்ளது. அதிக பட்ஜெட்டில் தயாராகும் பிரமாண்ட படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன.
அடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் வில்லியாக நடிக்கத்தான் ஐஸ்வர்யாராயை அணுகி பேசி வருகிறார்கள். இதில் ஐஸ்வர்யாராய் நடித்தால் வசூலில் சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் பான் இந்தியா படமாக இது தயாராக உள்ளது.