< Back
சினிமா செய்திகள்
கிரிக்கெட் வீரரை காதலித்த ஐஸ்வர்யா லட்சுமி
சினிமா செய்திகள்

கிரிக்கெட் வீரரை காதலித்த ஐஸ்வர்யா லட்சுமி

தினத்தந்தி
|
11 May 2023 7:25 AM IST

தமிழில் விஷாலின் ஆக்ஷன், தனுசுடன் ஜெகமே தந்திரம், ஆர்யாவின் கேப்டன் படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. கட்டா குஸ்தியில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வலுவான கதாபாத்திரம் அமைந்தது. பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் வந்தார். மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி அளித்துள்ள பேட்டியில், "நான் பிறந்தபோது என் அப்பா எனக்கு ஸ்ரீ லட்சுமி என்று பெயர் வைத்தார். அம்மா ஐஸ்வர்யா என்று பெயர் வைத்தார். கடைசியில் ஐஸ்வர்யா லட்சுமி ஆனேன். எனக்கு லட்சிய கதாபாத்திரம் எதுவும் இல்லை. ஆனால் வில்லி வேடங்களில் நடிக்க பிடிக்காது. வில்லியாக நடிக்க கூடாது என்று முடிவு செய்து இருக்கிறேன்.

காஞ்சீபுரம் பட்டு புடவைகள் கேரளா சம்பிரதாய புடவைகள் என்றால் மிகவும் பிடிக்கும். ஓய்வாக இருக்கும்போதெல்லாம் புடவைகளைக் கட்டிக் கொண்டு போட்டோ எடுத்துக் கொள்வேன். அபிஷேக் பச்சன் மற்றும் விஜய் படங்கள் அதிகமாக பார்ப்பேன். கிரிக்கெட் விளையாட்டு வீரர் யுவராஜ் சிங் என்றால் மிகவும் இஷ்டம். ஆறாம் வகுப்பில் தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரை அவரை மனதிற்குள் காதலித்து கொண்டே இருந்தேன். இப்போது கிரிக்கெட் பார்க்க நேரமே இல்லை'' என்றார்.

மேலும் செய்திகள்