< Back
சினிமா செய்திகள்
கேரள நடிகை பாலியல் வழக்கு.. சிக்கலில் முன்னாள் பெண் டிஜிபி?
சினிமா செய்திகள்

கேரள நடிகை பாலியல் வழக்கு.. சிக்கலில் முன்னாள் பெண் டிஜிபி?

தினத்தந்தி
|
26 July 2022 10:36 AM IST

கேரள நடிகை பாலியல் வழக்கில் நடிகருக்கு ஆதர்வாக பேசி முன்னாள் பெண் டிஜிபி சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

கேரளாவில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட நடிகை குறித்த வழக்கில், முன்னாள் சிறைத்துறை டிஜிபி ஸ்ரீலேகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரப்பட்டுள்ளது.

ஷெர்லி என்ற மாணவி அட்வகேட் ஜெனரலிடம் ஒரு மனு தாக்கல் செய்தார். நடிகை தாக்கப்பட்ட வழக்கில் திலீப்புக்கு ஆதரவாக பேசியதை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் திலீப் குற்றவாளி அல்ல என்று ஸ்ரீலேகா தனது யூடியூப் சேனல் மூலம் தெரிவித்துள்ளார்.

நடிகை தாக்கப்பட்ட வழக்கு முக்கியமான கட்டத்தில் இருக்கும்போது, ஸ்ரீலேகா திலீப்புக்கு ஆதரவாக பேசி இருப்பது காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்