சமந்தாவை தொடர்ந்து சுருதிஹாசன்...ஹாலிவுட் படத்திலிருந்து விலகல்
|'சென்னை ஸ்டோரி' ஹாலிவுட் படத்தில் இருந்து சுருதிஹாசன் விலகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழ், தெலுங்கு, இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள சுருதிஹாசன் ஏற்கனவே 'தி ஐ' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து இருந்த நிலையில் சமீபத்தில் 'சென்னை ஸ்டோரி' என்ற பெயரில் தயாராகும் இன்னொரு ஹாலிவுட் படத்தில் நடிக்கவும் தேர்வாகி இருந்தார்.
பிலிப் ஜான் இயக்கும் இந்த படத்தில் சுருதிஹாசனுக்கு ஜோடியாக விவேக் கல்ரா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தில் நடிக்க முதலில் சமந்தாவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். ஆனால் அவர் படத்தில் இருந்து திடீரென்று விலகி விட்டார். எனவே அவருக்கு பதிலாக சுருதிஹாசனை தேர்வு செய்தனர்.
இந்த நிலையில் தற்போது சுருதிஹாசனும் 'சென்னை ஸ்டோரி' ஹாலிவுட் படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளியேறியதற்கான காரணம் தெரியவில்லை.
சுருதிஹாசன் சமீபத்தில் திரைக்கு வந்த சலார் படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து இருந்தார். இனிமேல் என்ற இசை பாடல் ஆல்பத்தையும் வெளியிட்டார்.