< Back
சினிமா செய்திகள்
சமந்தாவை தொடர்ந்து இன்னொரு நடிகை அரியவகை நோயால் பாதிப்பு
சினிமா செய்திகள்

சமந்தாவை தொடர்ந்து இன்னொரு நடிகை அரியவகை நோயால் பாதிப்பு

தினத்தந்தி
|
3 Dec 2022 11:18 AM IST

நடிகை பூனம் கவுரும் பைப்ரோமியால்ஜியா என்ற அரிய வகை நோயால் பாதித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை

நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

ஸ்டூடியோவிலும் குளுக்கோஸ் ஏற்றியபடி டப்பிங் பேசிய புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் விரைவில் குணம் அடைய ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்தி உள்ளனர்.

இந்த நிலையில் நடிகை பூனம் கவுரும் பைப்ரோமியால்ஜியா என்ற அரிய வகை நோயால் பாதித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.பூனம் கவுர் தமிழில் 2007-ல் வெளியான நெஞ்சிருக்கும் வரை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, ஆறு மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். பூனம் கவுரை தாக்கியுள்ள நோயால் சோர்வு, தூக்கம், மன நிலை பிரச்சினைகள் ஏற்படும் என்றும், வாழ்நாள் முழுவதும் இந்த நோய் பாதிப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது பூனம் கவுர் உடல் வலியால் அவதிப்படுவதாக நெருக்கமானவர்கள் தெரிவித்து உள்ளனர். அவர் விரைவில் குணம் அடைய ரசிகர்கள் வாழ்த்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்