மெட் காலா பேஷன் : கண்ணைக்கவரும் ஆடைகளில் கவர்ச்சி விருந்தளித்த பிரபலங்கள்...!
|நிகழ்வில் சினிமா, அரசியல், சோசியல் மீடியா பிரபலங்கள், விளையாட்டு வீராங்கனைகள், பத்திரிகையாளர்கள் என பலரும் ஆண்டுதோறும் கலந்து கொள்கின்றனர்.
நியூயார்க்
நியூயார்க் நகரத்தில் உள்ள மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆப் ஆர்ட், பேஷன் மற்றும் கேளிக்கை துறை நடத்தும் மெட் காலா 2023 நிகழ்வு தொடங்கியுள்ளது.
மெட் காலா பேஷன் ஷோ 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வு நியூயார்க் நகரத்தின் மன்ஹாட்டனில் உள்ள அன்னா வின்டோரால் மெட்ரோ பொலிட்டன் கலை அருங்காட்சியகத்தில் உள்ள ஆடை நிறுவனத்திற்கு பயனளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு. இந்த காண்காட்சியின் மூலம் கிடைக்கும் நிதி மெட்ரோ பொலிட்டன் அருங்காட்சியகத்துக்கு வழங்கப்படும்.
இந்த நிகழ்வில் சினிமா, அரசியல், சோசியல் மீடியா பிரபலங்கள், விளையாட்டு வீராங்கனைகள், பத்திரிகையாளர்கள் என பலரும் ஆண்டுதோறும் கலந்து கொள்கின்றனர்.
மெட் காலா நிகழ்ச்சியின் டிக்கெட் விலை 30,000 அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.25 லட்சம்) இருந்தது. ஆனால் இந்த ஆண்டுக்கான மெட் காலா நிகழ்ச்சியின் டிக்கெட் விலை 50,000 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.( இந்திய மதிப்பில் 41 லட்சம் ரூபாய்) இதன் காரணமாகவே சில பிரபலங்கள் இந்த ஆண்டு நடந்த மெட் காலா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
இந்த ஆண்டு மறைந்த ஆடை வடிவமைப்பாளர் கார்ல் லாகர்பெல்டுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இருந்தது. நிகழ்ச்சியில் இதனைத் தொடர்ந்து உலகளவில் உள்ள பிரபலங்கள் பலரும் வித்தியாசமான ஆடை அணிந்து நிகழ்வில் பங்கேற்று வருகின்றனர்.
அலியா பட், பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸ், கிம் கர்தாஷியன், கெண்டல் ஜென்னர், ரிஹானா, ஜிகி ஹடிட், நவோமி காம்பெல், பிளாக்பிங்க்ஸ் ஜென்னி, பில்லி எலிஷ், லில்லி-ரோஸ் டெப், துயா போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
பிரபலங்கள் கண்ணைக்கவரும் ஆடைகளில் கண்களுக்கு விருந்தளித்தனர்.கெண்டல் ஜென்னர் குளித்து கொண்டு இருக்கும் போது பாதியிலேயே வந்தது போல் ஒரு மெல்லிய மினி உடையை அணிந்து ஒய்யாரமாக வந்தார்.மறுபுறம், பிரியங்கா சோப்ரா, ஒரு மெல்லிய கருப்பு உடையுடன் கோல்டன் ஹூப் காதணிகளுடன் அடர் சிவப்பு சட்டை உடையில் பிரமிக்க வைத்தார். விருந்துக்குப் பிறகு மெட் காலாவிற்கான தனது புதிய தோற்றத்தை ஜெனிபர் லோபஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.