< Back
சினிமா செய்திகள்
அமிதாப் பச்சனுக்கு அடுத்து சினிமாத்துறையில் எனக்குத்தான் அதிக அன்பு கிடைக்கிறது - கங்கனா
சினிமா செய்திகள்

அமிதாப் பச்சனுக்கு அடுத்து சினிமாத்துறையில் எனக்குத்தான் அதிக அன்பு கிடைக்கிறது - கங்கனா

தினத்தந்தி
|
6 May 2024 7:19 PM IST

நடிகர் அமிதாப் பச்சனுக்கு அடுத்தபடியாக அதே அளவு அன்பு தனக்குத்தான் கிடைத்து வருகிறது என நடிகை கங்கனா கூறியிருக்கிறார். இவரது இந்தப் பேச்சு நெட்டிசன்கள் மத்தியில் கேலியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்டத்தில் இமாச்சலப் பிரதேசம், மண்டி தொகுதிக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் அந்தத் தொகுதியின் பாஜக வேட்பாளர் கங்கனா. அவர் பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே அவர் செய்யும் பல விஷயங்களும் இணையத்தில் சர்ச்சைக்குள்ளாகி கவனம் ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் தன்னை அவர் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கங்கனாவை கேலி செய்து வருகின்றனர். நேற்று மண்டி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, "நான் ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி, மணிப்பூர் என நாடு முழுவதும் எங்கு சென்றாலும் எனக்கு வியப்புதான்! ஏனெனில், அந்த அளவுக்கு மக்கள் என்மீது அன்பு பொழிந்து வருகின்றனர். நடிகர் அமிதாப் பச்சனுக்குப் பிறகு, இந்தத் துறையில் யாருக்காவது இவ்வளவு அன்பும் மரியாதையும் கிடைக்கிறது என்றால், அது எனக்குத்தான்! இதை என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்" என்றார் கங்கனா. இந்த விஷயம்தான் நெட்டிசன்கள் மத்தியில் கேலி ஆகியுள்ளது.

ஜூன் 14 -ம் தேதி வெளியாகும் 'எமர்ஜென்சி' திரைப்படத்தின் வெளியீட்டிற்காக கங்கனா காத்திருக்கிறார். இப்படத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக கங்கனா நடித்திருக்கிறார்.

மேலும் செய்திகள்