அமிதாப்பச்சன், ஷாருக்கானை தொடர்ந்து அலிபாக்கில் இடம் வாங்கிய நடிகை
|நடிகை கிருத்தி சனோன் மும்பையின் அலிபாக் நகரில் இடம் வாங்கியுள்ளார்.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை கிருத்தி சனோன். தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான பிரபாஸின் 'ஆதிபுருஷ்' படத்தில் சீதை கதாபாத்திரத்தில் கிருத்தி சனோன் நடித்திருந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் 'க்ரூ' என்ற இந்தி படம் வெளியானது.
இந்நிலையில்,நடிகை கிருத்தி சனோன் மும்பையின் அலிபாக் நகரில் இடம் வாங்கியுள்ளார்.இந்த அலிபாக் மும்பைக்கு தெற்கே அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரமாகும். இங்கு ஏற்கனவே பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப்பச்சன், ஷாருக்கான், ரன்பீர் சிங் போன்ற பிரபலங்களின் இடம் உள்ளது.
தற்போது, இவர்களை தொடர்ந்து, நடிகை கிருத்தி சனோனும் பங்களா கட்ட சுமார் 2,000 சதுர அடி நிலத்தை வாங்கியுள்ளார். இதன் மூலம் கிருத்தி, அமிதாப் பச்சனின் பக்கத்து வீட்டாராக மாறியுள்ளார். அமிதாப் பச்சன், கடந்த ஏப்ரலில் இதே பகுதியில் 10,000 சதுர அடி நிலம் வாங்கினார்.
கிருத்தி, அலிபாக்கில் முதலீடு செய்வதற்கு முன், பெங்களூருவிலும், கோவாவில் உள்ள வில்லாவிலும் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது