ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்கு பின் நாளை வெளியாகிறது ஆலம்பனா திரைப்படம்..!
|இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2021ம் ஆண்டு தொடக்கத்தில் நிறைவடைந்தது.
சென்னை,
புதுமுக இயக்குனர் பாரி கே.விஜய் இயக்கத்தில் நடிகர் வைபவ் நடித்திருந்த படம் 'ஆலம்பனா'. இந்த படத்தில் பார்வதி நாயர், முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த் ராஜ், பாண்டியராஜ், லியோனி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் மற்றும் கொஸ்துப் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
குழந்தைகளுக்கு பிடித்த பேண்டஸி கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் நடிகர் முனிஷ்காந்த் அலாவுதீன் பூதம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2021ம் ஆண்டு தொடக்கத்தில் நிறைவடைந்தது.. ஆனால் பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் பணிகள் தள்ளி போனது.
இந்நிலையில் ரசிகர்களின் 3 வருட காத்திருப்புக்கு பிறகு ஒருவழியாக இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படம் வருகிற டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.