< Back
சினிமா செய்திகள்
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்ற சமந்தா
சினிமா செய்திகள்

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்ற சமந்தா

தினத்தந்தி
|
24 Jan 2023 6:20 AM IST

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது சிட்டாடல் இந்தியா வெப் தொடர் படப்பிடிப்பில் சமந்தா பங்கேற்று நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா படப்பிடிப்புகளில் பிஸியாக பங்கேற்று நடித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்த நோய் குணமாக சிறிது காலம் ஆகும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

இது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமந்தா விரைவில் குணமடைய வாழ்த்தினர். நோய் பாதிப்பு காரணமாக ஏற்கனவே ஒப்பந்தமான இந்தி படங்களில் இருந்து சமந்தா விலகி விட்டதாக தகவல்கள் பரவின. இதனை சமந்தாவின் உதவியாளர் மறுத்தார்.

வருண் தவானுடன் சிட்டாடல் இந்தியா என்ற வெப் தொடரில் நடிக்க சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். அதன் படப்பிடிப்பை சமந்தா சிகிச்சையில் இருந்ததால் நிறுத்தி வைத்து இருந்தனர். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது சிட்டாடல் இந்தியா வெப் தொடர் படப்பிடிப்பில் சமந்தா பங்கேற்று நடித்து வருகிறார். படப்பிடிப்பில் சமந்தா இணைந்த தகவலை படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்