< Back
சினிமா செய்திகள்
வில்லியாக நடித்ததால் பாதிப்பு- திரிஷா ஆதங்கம்
சினிமா செய்திகள்

வில்லியாக நடித்ததால் பாதிப்பு- திரிஷா ஆதங்கம்

தினத்தந்தி
|
24 July 2022 2:16 PM IST

‘கொடி’ படத்தில் வில்லியாக நடித்ததால் தான் தனக்கு கதாநாயகி வாய்ப்புகள் வராமல் போய்விட்டதாக திரிஷா வருத்தப்படுகிறாராம்.

தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக நீண்டகாலமாக இருந்து வருபவர், திரிஷா. பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனாலும் முன்பு போல் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதுமட்டுமன்றி புதுப்புது கதாநாயகிகளின் வரவால் இவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்து போனது.

தற்போது திரிஷா தனது நண்பர்களிடம் அடிக்கடி ஒரு விஷயத்தை கூறி வருத்தப்படுகிறாராம். தனுஷ் நடித்த 'கொடி' படத்தில் வில்லியாக நடித்திருக்க கூடாது என்றும், அந்த படத்துக்கு பிறகு தனது சினிமா வாய்ப்புகள் குறைந்து போனதாக கவலை தெரிவித்து வருகிறார். 'கொடி' படத்தில் வில்லியாக நடித்ததால் தான் தனக்கு கதாநாயகி வாய்ப்புகள் வராமல் போய்விட்டது.

அது மட்டுமல்லாமல் 2-வது கதாநாயகியாக நடிக்கவும் என்னை கேட்கிறார்கள், என்று ஆதங்கப்பட்டு கொள்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாக உள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தை தான் திரிஷா தற்போது பெரிதும் நம்பி இருக்கிறார்.

மேலும் செய்திகள்