சுஷ்மிதாசென் திருமணத்தை தடுக்கும் தத்து குழந்தைகள்...!
|சுஷ்மிதா சென் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார்
பிரபல இந்தி நடிகயான சுஷ்மிதா சென் தமிழில் 'ரட்சகன்' படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். அர்ஜுனின் 'முதல்வன்' படத்தில் சக்கலக்க பேபி பாடலுக்கு அவர் ஆடிய நடனமும் ரசிகர்களை கவர்ந்தது.
சுஷ்மிதா சென்னுக்கு இந்தியில் பல நடிகர்களுடன் காதல் மலர்ந்தும் எதுவும் நிலைக்கவில்லை. இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார். 2010-ல் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து தனது சொந்த மகள்கள் போலவே வளர்த்து வருகிறார்.
தற்போது சுஷ்மிதா சென் அளித்துள்ள பேட்டியில், ''குழந்தைகள் மீது அதிக பாசம் வைத்துள்ளேன். அவர்கள் அப்பா இல்லை என்று எப்போதுமே வருந்தியது இல்லை. நான் திருமணம் செய்துகொள்ள நினைத்தாலும் இப்போது எதற்கு திருமணம். எங்களுக்கு அப்பா தேவை இல்லை என்று சொல்லி தடுக்கின்றனர்.
எனக்கு கணவர் தேவையோ என்றுகூட அவர்கள் நினைப்பது இல்லை. திருமணம் குறித்து நாங்கள் நகைச்சுவையாக நிறைய பேசிக்கொள்வோம். தந்தை இல்லை என்ற குறை தெரியாமல் வளர்கிறார்கள். எனது தந்தை குழந்தைகளுடன் விளையாடுகிறார்'' என்றார்.