ஆஸ்பத்திரியில் அனுமதி... பிரபல ஹாலிவுட் நடிகர் கவலைக்கிடம்
|பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் சைஸ்மோர் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் சைஸ்மோர். இவர் சேவிங் பிரைவேட் ரியான், ஹீட், பிளாக் ஹாக் டவுன், நேச்சுரல் பார்ன் கில்லர்ஸ் உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். தற்போது அவருக்கு 61 வயது ஆகிறது.
இந்த நிலையில் டாம் சைஸ்மோர்க்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள வீட்டில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆனாலும் டாம் சைஸ்மோர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். டாம் சைஸ்மோர் போதையில் கார் ஓட்டியதாகவும் போதை பொருள் வைத்திருந்ததாகவும் பல முறை கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.