< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'மாஸ்டர்' பட நடிகருக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்?
|25 Jun 2024 8:17 PM IST
அதிதி ஷங்கரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது
சென்னை,
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் கார்த்திக் ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மாவீரன்' படத்திலும் நடித்தார்.
தற்போது அதர்வா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். இந்நிலையில், அதிதி ஷங்கரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் அர்ஜுன் தாசுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாக கூறப்படுகறது.
மேலும், இப்படத்தை "குட் நைட்" மற்றும் "லவ்வர்" படங்களை தயாரித்த மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.