< Back
சினிமா செய்திகள்
சூர்யா 43 படத்தில்  இணைந்த அதிதி ஷங்கர்..? வெளியான தகவல்
சினிமா செய்திகள்

'சூர்யா 43' படத்தில் இணைந்த அதிதி ஷங்கர்..? வெளியான தகவல்

தினத்தந்தி
|
10 Jan 2024 9:44 PM IST

சூர்யாவிற்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது

சென்னை,

நடிகர் சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் ஜி.வி. பிரகாஷின் 100-வது படமாகும்.

இந்நிலையில், 'சூர்யா 43' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடிகை நஸ்ரியா இப்படத்திலிருந்து விலகியுள்ளதாகவும் செய்தி பரவி வருகிறது.

மேலும் செய்திகள்