< Back
சினிமா செய்திகள்
ஹீரமண்டியை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு, அவர் அழுது விட்டார் - அதிதி ராவ்
சினிமா செய்திகள்

'ஹீரமண்டியை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு, அவர் அழுது விட்டார்' - அதிதி ராவ்

தினத்தந்தி
|
13 May 2024 9:39 AM IST

சஞ்சய் லீலா பன்சாலி "ஹீரமண்டி: தி டைமண்ட் பஜார்" என்ற சீரிஸை இயக்கியுள்ளார்.

மும்பை,,

பாலிவுட்டின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் தற்போது "ஹீரமண்டி: தி டைமண்ட் பஜார்" என்ற சீரிஸை இயக்கியுள்ளார். இதில், சோனாக்சி சின்கா, மனிஷா கொய்ராலா, ஷர்மின் சீகல், ரிச்சா சத்தா, சஞ்சீதா ஷேக், அதிதி ராவ் மற்றும் பலர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.

இது சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பெண்களின் நிலை பற்றிய கதையம்சம் கொண்ட சீரிஸாக உருவாகி இருக்கிறது. இந்த சீரிஸ் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், நடிகர் சித்தார்த் இந்த சீரிஸை பார்த்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக அதிதி ராவ் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது,

" ஹீரமண்டியை சித்தார்த் மிகவும் நேசித்தார். அவர் அதை பார்த்து பேச முடியாமல் திணறினார். மேலும், உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டார். என்னிடம் அவர் சஞ்சய் லீலா பன்சாலி சாரை விரைவில் சந்திக்க வேண்டும் என்றார், இவ்வாறு கூறினார்.


மேலும் செய்திகள்