நடிகர் சித்தார்த்துடன் காதலா....! நடிகை அதிதி ராவ் பதில்
|நடிகர் சித்தார்த், பிரபல நடிகை அதிதி ராவுடன் டேட்டிங் செய்து வருவதாக சமீப காலமாக சில கிசுகிசுக்கள் வெளியாகி வருகிறது.
மும்பை
மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து பிரபலமானவர் அதிதி ராவ் ஹைதரி. செக்க சிவந்த வானம், சிருங்காரம், சைக்கோ, ஹாய் சினாமிகா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது முகலாய மன்னன் அக்பரின் வாழ்க்கை வரலாற்று கதையாக தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் தாஜ் என்ற வெப் தொடரில் அதிதி ராவ் நடித்து இருக்கிறார். இதில் அக்பர் கதாபாத்திரத்தில் நசுருதீன் ஷாவும், அவரது மகன் சலீமாக ஆஷிம் குலாட்டியும், இவரது காதலி அனார்கலி வேடத்தில் அதிதிராவும் நடித்துள்ளனர்.
நடிகர் சித்தார்த், பிரபல நடிகை அதிதி ராவுடன் டேட்டிங் செய்து வருவதாக சமீப காலமாக சில கிசுகிசுக்கள் வெளியாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தனது தனிப்பட்ட கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி வரும் சித்தார்த் தற்போது காதல் வலையில் விழுந்துவிட்டதாக செய்திகளும் வெளியாகுகிறது. அஜய் பூபதி இயக்கத்தில் வெளியான 'மகா சமுத்திரம்' படத்தில் சித்தார்த்தும், அதிதி ராவும் இணைந்து நடித்தனர்.
இவர்கள் இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்லும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வந்தது.
கடந்த 2021-ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான 'எனிமி' படத்தில் இடம்பெற்ற 'மால டும் டும்' பாடலுக்கு நடனமாடிய வீடியோவை சித்தார்த்-அதிதி ராவ் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி 'டான்ஸ் மங்கீஸ்-தி ரீல் டீல்' என்கிற கேப்ஷனையும் சேர்த்து பதிவிட்டு இருந்தனர். இதனால் அவர்கள் காதல் உறுதிபடுத்த்ப்பட்டதாக கூறபட்டது.
ஆனால் இதனை அதிதி ராவ் ஹைதரி மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
மக்கள் அப்படித்தான் பேசுவார்கள், அதை தடுக்க முடியாது எதையும் தெளிவுபடுத்த வேண்டிய அவசி இல்லை, அது 'தேவையற்றவை' எனது வேலையில் கவனம் செலுத்துகிறேன்.
தான் விரும்பும் இயக்குனர்களுடன் பணிபுரியும் வரை மற்றும் பார்வையாளர்கள் தன்னை ஏற்றுக்கொள்ளும் வரை தான் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கூறினார்.
2023ஆம் ஆண்டு அதிதிக்கு மிகவும் பிஸியான ஆண்டாக இருக்கும். ஏனெனில் மூன்று வெப் சிரீஸ் மற்றும் ஒரு படம் ரிலீஸுக்காக காத்து இருக்கின்றன.