நிச்சயதார்த்தத்திற்கு பிறகு... அதிதி ராவின் முதல் புகைப்படம் - வைரல்
|கடந்த 28-ம் தேதி சித்தார்த்தும் அதிதி ராவும் தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததாக தெரிவித்தனர்.
சென்னை,
நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இடாகி என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.
சமீப காலமாக நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.
இதனிடையே, சித்தார்த்தும் அதிதி ராவும் தெலுங்கானாவில் உள்ள வனபர்த்தியில் கடந்த 27-ம் தேதி திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இருவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் 28-ம் தேதி "அவர் யெஸ் சொன்னார். நிச்சயதார்த்தம் முடிந்தது" என்று பதிவிட்டு நிச்சயதார்த்தம் முடிந்ததாக தெரிவித்தனர். இதனைக்கண்ட ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், நிச்சயதார்த்தத்திற்கு பிறகு அதிதி ராவ் முதன்முதலில் பொது வெளியில் செல்லும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.