< Back
சினிமா செய்திகள்
Aditi Rao Hydari and Siddharth tie the knot

image courtecy:instagram@aditiraohydari

சினிமா செய்திகள்

நடிகர் சித்தார்த்தை கரம்பிடித்தார் நடிகை அதிதி ராவ்

தினத்தந்தி
|
16 Sept 2024 12:44 PM IST

நடிகர் சித்தார்த்- நடிகை அதிதி ராவ் திருமணம் நடைபெற்றுள்ளது.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவரும் பிரபல நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தநிலையில், சமீபத்தில் 400 ஆண்டுகள் பழமையான குலதெய்வ கோவிலில் வைத்து தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததாக அறிவித்தனர்.

இதனையடுத்து, இவர்களது திருமணத்தை எதிர்நோக்கி அவர்களது ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், இருவருக்கும் சொந்த பந்தங்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதிதி ராவ், நடிகர் சித்தார்த்தை கரம்பிடித்ததையடுத்து அவர்களுக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சித்தார்த்தும் அதிதி ராவும் கடந்த 2021-ம் ஆண்டு தமிழ், தெலுங்கில் வெளியான 'மகா சமுத்திரம்' படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்