< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
இத்தாலியில் சித்தார்த், அதிதிராவ் - வைரலாகும் புகைப்படங்கள்
|5 Jun 2024 8:25 PM IST
சித்தார்த்தும், அதிதிராவும் இத்தாலி சென்றுள்ளனர்.
சென்னை,
நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதிராவ் ஹைதரியும் காதலித்து வந்தனர். சமீபத்தில் இருவருக்கும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. ஆனாலும் சில புகைப்படங்கள் கசிந்து திருமணம் முடிந்துவிட்டதாக பலரும் பேசினர். திருமணம் நடக்கவில்லை. நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்று இருவரும் விளக்கம் அளித்தனர்.
தற்போது சித்தார்த்தும், அதிதிராவும் இத்தாலி சென்றுள்ளனர். அங்கு பல்வேறு அழகான இடங்களை இருவரும் சுற்றிப்பார்த்தனர். இயற்கை அழகை ரசித்தனர். அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளனர். அவை வைரலாகிறது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இருவரும் பொருத்தமான ஜோடி என்று பதிவுகள் வெளியிட்டு பாராட்டி வருகிறார்கள்.