< Back
சினிமா செய்திகள்
நன்றி..தேங்க்ஸ்..சுக்ரியா..நன்னி..தன்யவாத்.. 5 மொழிகளில் நன்றி சொன்ன ஆதித்த கரிகாலன்
சினிமா செய்திகள்

நன்றி..தேங்க்ஸ்..சுக்ரியா..நன்னி..தன்யவாத்.. 5 மொழிகளில் நன்றி சொன்ன ஆதித்த கரிகாலன்

தினத்தந்தி
|
1 Oct 2022 3:28 PM IST

நடிகர் விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சென்னை

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது.

பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலனாக வரும் விக்ரம் மிக சரியான தேர்வு. தனது திறமையான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

நடிகர் விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில்,''நன்றி..தேங்க்ஸ்..சுக்ரியா..நன்னி..தன்யவாத்.. இப்படி எந்த மொழியில் சொன்னாலும், கேட்பதற்கும் உணர்வதற்கும் நன்றாக உள்ளது. பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த வரவேற்பு ஆதித்த கரிகலானுக்கு கிடைத்த அந்த ஆக்ரோஷமான பின்னூட்டம் ரொம்ப நன்றி.

நான் நிறைய படங்களில் நடித்திருக்கேன்; நிறைய நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருக்கேன். எப்போதும் எல்லா படங்களையும், என் படம், என்னுடைய கதாபாத்திரம் என பெருமைப்படுவேன். எல்லோரும் இது எங்களுடைய படம் என கொண்டாடுவது எனக்கு பெரிய மகிழ்ச்சி. படக்குழு உள்ளிட்டவர்களுக்கும் இயக்குநர் மணிரத்னத்துக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்