< Back
சினிமா செய்திகள்
திருப்பதி கோவில் வளாகத்தில் கீர்த்தி சனோனை திடீரென கட்டிபிடித்து முத்தம் கொடுத்த ஆதிபுருஷ் டைரக்டர்- வைரல் வீடியோ
சினிமா செய்திகள்

திருப்பதி கோவில் வளாகத்தில் கீர்த்தி சனோனை திடீரென கட்டிபிடித்து முத்தம் கொடுத்த ஆதிபுருஷ் டைரக்டர்- வைரல் வீடியோ

தினத்தந்தி
|
7 Jun 2023 2:04 PM IST

ஆதிபுருஷ் டீசரின் கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் இதை விட கார்ட்டூன் நெட்வொர்க் சீரிஸ் தான் சிறந்தது கார்ட்டூன் நெட்வொர்க்கில் வெளியிடுங்கள் என்று கூறி கிண்டல் செய்தனர்.

திருப்பதி

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தன. தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வர நடிகர் பிரபாஸ் தேர்ந்தெடுத்த திரைப்படம் தான் ஆதிபுருஷ். இராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார்.

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதிபுருஷ் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர்.

ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சராயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது. ஆனால், டீசரை பார்த்த நெட்டிசன்ஸ், படத்தின் கிராபிக்ஸ் வேலையைப் பார்த்து கொதித்து போனார்கள்

ஆதிபுருஷ் டீசரின் கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் இதை விட கார்ட்டூன் நெட்வொர்க் சீரிஸ் தான் சிறந்தது கார்ட்டூன் நெட்வொர்க்கில் வெளியிடுங்கள் என்று கூறி கிண்டல் செய்தனர்.

ஆனால் தற்போது டீசரின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு டிரெய்லர் நேற்று வெளியானது.

ஆதிபுருஷ் திரைப்படம் வருகிற ஜூன் 16-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே எஞ்சி உள்ளதால் அதன் புரமோஷன் பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகின்றன.

ஆதிபுருஷ் படத்தின் பிரம்மாண்டமான பிரீ ரிலீஸ் ஈவண்ட் நேற்று திருப்பதியில் நடைபெற்றது. இதற்காக திருப்பதி வந்த நடிகர் பிரபாஸ் நேற்று அதிகாலையில், திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து இன்று காலை ஆதிபுருஷ் படத்தின் டைரக்டரும், நடிகை கீர்த்தி சனோனும் திருப்பதி கோவிலுக்கு சென்றிருந்தனர்.

இருவரும் சாமி தரிசனம் செய்த பின்னர் அவர்களுக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆதிபுருஷ் திரைப்படம் வெற்றிபெற வேண்டி அவர்கள் பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து வெளியே வந்த இருவரும், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் காரில் ஏறி கிளம்ப சென்ற நடிகை கீர்த்தி சனோனை வழியனுப்ப டைரக்டர் ஓம் ராவத் காரின் அருகே நின்றுகொண்டிருந்தார்.

அப்போது அவரை மரியாதை நிமித்தமாக கட்டிப்பிடிக்க வந்த நடிகை கீர்த்தி சனோனுக்கு இயக்குனர் ஓம் ராவத் சட்டென முத்தம் கொடுத்துவிட்டார். அவரின் இந்த செயலை சற்றும் எதிர்பார்க்காத கீர்த்தி சற்று அதிர்ச்சி ஆனார். பின்னர் காரில் ஏறி கிளம்பி சென்றார். ஆதிபுருஷ் டைரக்டரின் இந்த செயல் இணையத்தில் கடுமையாக டிரோல் செய்யப்பட்டு வருகிறது

இதற்கு எதிராக கருத்து தெரிவித்த பாஜக மாநில செயலாளர் ரமேஷ் நாயுடு பாசத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியதைக் கண்டு கோபமடைந்த மாநில பாஜக தலைவர், இது தேவையா என்று கேள்வி எழுப்பினார்.பின்னர் அந்த டுவீட் தற்போது நீக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்