பிரபாஸின் ஆதிபுருஷ் டிரெய்லர் எப்படி உள்ளது...?
|ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மும்பை
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தன. தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வர நடிகர் பிரபாஸ் தேர்ந்தெடுத்த திரைப்படம் தான் ஆதிபுருஷ். இராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார்.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதிபுருஷ் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர்.
ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சராயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது. ஆனால், டீசரை பார்த்த நெட்டிசன்ஸ், படத்தின் கிராபிக்ஸ் வேலையைப் பார்த்து கொதித்து போனார்கள்
ஆதிபுருஷ் டீசரின் கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் இதை விட கார்ட்டூன் நெட்வொர்க் சீரிஸ் தான் சிறந்தது கார்ட்டூன் நெட்வொர்க்கில் வெளியிடுங்கள் என்று கூறி கிண்டல் செய்தனர்.
இதுகுறித்து இயக்குனர் ஓம் ராவத் கூறியதாவது:-
"ஆதிபுருஷ் ஒரு படம் மட்டுமல்ல, ராமர் மீதான நமது பக்தி மற்றும் நமது கலாச்சாரம் மற்றும் வரலாறு மீதான நமது அர்ப்பணிப்பின் அடையாளம் மற்றும் பார்வையாளர்களுக்கு சிறந்த காட்சி அனுபவத்தை வழங்க படக்குழுவுக்கு இன்னும் சிறிது நேரம் தேவை. எனவே, படம் ஜூன் 16, 2023 அன்று வெளியாகும். இந்தியாவே பெருமைப்படும் வகையில் திரைப்படம் எடுப்பதில் உறுதியாக உள்ளோம். உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு ஒரு ஆசீர்வாதம். அதுதான் நம்மை முன்னோக்கி செலுத்தும்.
இந்த நிலையில் இன்று ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லரை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. இந்த டிரெய்லர் பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை என்றாலும் டீசரோடு ஒப்பிடுகையில் இது நன்றாக இருப்பதாக கூறி வருகின்றனர்.
தற்போது டிரெய்லர் வெளியாகி ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. ராமாயணத்தின் கதைக் காட்சிகளை டிரைலரிலும் காணலாம். நல்ல விஎப்எக்ஸ் துணையுடன், அந்தக் காட்சிகள் வித்தியாசமான சுவாரஸ்ய அனுபவத்தைத் தருகின்றன.
ஆதிபுருஷ் படம் வருகிற ஜூன் மாதம் 16-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் பெரியளவில் ரசிகர்களை ஈர்க்காததால், இது ரூ.1000 கோடி வசூலை எட்டுமா அல்லது பிரபாஸுக்கு ஹாட்ரிக் தோல்வி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.